அரசியல் அறிவிப்புக்கு பின் இணையதளம், செயலியை தொடங்கிய ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Tuesday,January 02 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற 25 ஆண்டுகால விடுகதைக்கு கடந்த 31ஆம் தேதி விடை கிடைத்தது. தீவிர அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்த ரஜினிகாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் நேற்று தனது வீட்டின் முன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய ரஜினிகாந்த், நேற்று புதிய இணையதளம் மற்றும் செயலி குறித்த அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு முக்கிய அறிவிப்பு. என்னுடைய பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிற மக்களையும் ஒருங்கிணைத்து, ஒரு குடைக்கு கீழே கொண்டுவரவேண்டும்.
அதற்கான நான், www.rajinimandram.org என்ற இணையதள பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். அதில் நீங்கள் உங்களுடைய பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு. இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்
???????? pic.twitter.com/jnqZv1iWGz
— Rajinikanth (@superstarrajini) January 1, 2018