இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்ற காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Friday,November 12 2021]
சென்னை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று மரம் விழுந்ததால் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உதயா என்ற இளைஞரை தனது தோளில் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் காப்பாற்ற முயற்சி செய்த இளைஞர் உதயா இன்று சிகிச்சையின் சிகிச்சை பலனின்றி காலமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் pic.twitter.com/T20ichpUWw
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 11, 2021
சென்னையில் பெய்து வரும் கனமழையின் போது கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி இராஜேஸ்வரி அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார் pic.twitter.com/ibCyRxgf7J
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 12, 2021