நான் மட்டும் ஊஞ்சலில் ஆடியபடி..... ஸ்ரீதேவிக்கு பிறகு சிம்ரன்
- IndiaGlitz, [Friday,September 13 2024]
நடிகர், கொள்கைவாதி, பிரபலங்களை பேட்டி எடுக்கும் நெறியாளர் என பன்முகம் கொண்ட ராஜேஷ் Home Tour நிகழ்ச்சியில் Indiaglitz நேயர்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள்....
15 வயதில் இது போன்ற ஒரு வீட்டில் வாழ வேண்டும் என்று நினைத்தேன். கட்டிய வீட்டை வாங்கி, எனக்கு தேவையான மாற்றங்களை செய்துகொண்டேன். எனக்கு வளைந்த படிக்கட்டு பிடிக்கும். அதற்காகவே இந்த வீட்டை வாங்கி சில மாற்றங்களை செய்தேன்.
பார் மகளே பார் படத்தில் வருவது போன்ற காட்சி என் வாழ்க்கையில் நடைபெற்றது. என் மகள் என்னை பிரிந்து அமெரிக்கா சென்றுவிட்டாள். ஒரு நாள் இந்த படிக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது அவளை நினைத்துக்கொண்டு அழுதேன்.
சிறுவயதில் எனக்கு திக்குவாய்,அப்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. திக்குவாய் வைத்துக்கொண்டு எப்படி நடிப்பது ?
வீட்டில் உள்ள அறையில் கதவை மூடிக்கொண்டு, கலைஞர் எழுதிய பராசக்தி, வசனத்தை பலமுறை பேசிப்பார்ப்பேன். பின்னாளில் நான் சரளமாக பேச கலைஞரின் தமிழ் பெரும் உதவியாக இருந்தது.
கே.ஆர் விஜய அம்மா வீட்டு bedroom பார்த்துட்டு, அதே போல வேண்டும் என்று செய்ததுதான் இந்த வீட்டோட bedroom.
ஒரு முறை சிவாஜி சாருக்கு அவரோட புகைப்படம் எல்லாம் கொண்டுபோய் காட்டினேன். இந்த புகைப்படம் எல்லாம் உன்வீட்டில உன் பேரக்குழந்தைகள் பார்ப்பது நியாயமா ? என் வீட்டில என் பேரக் குழந்தைகள் பார்ப்பது நியாயமானு கேட்டாரு ? அங்கயே எல்லா படத்தையும் கொடுத்துட்டு வந்துட்டேன்.
இன்னும் பல விஷயங்களை இந்த பேட்டியில் ஸ்வாரஷ்யமாக பகிர்ந்துள்ளார்