மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய படங்கள் அனைத்திலும் நாயகன், நாயகி மாறுவார்களே தவிர சந்தானம் மட்டுமே மாறவே மாட்டார். 'கடவுள் இருக்குறான் குமாரு' படம் தவிர ராஜேஷின் அனைத்து படங்களிலும் சந்தானம் காமெடி வேடங்களில் நடித்திருப்பார். காமெடி நடிகர் என்று சொல்வதைவிட ராஜேஷின் படங்களில் சந்தானம் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ போன்று நடித்திருப்பார். அந்த அளவுக்கு அவருக்கு கதையிலும் காட்சியிலும் முக்கியத்துவம் இருக்கும்

இந்த நிலையில் சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் ஆகிவிட்டதால் ராஜேஷ் படம் உள்பட யாருடைய படத்திலும் காமெடி வேடங்களில் அவர் நடிப்பதில்லை. எனவே ராஜேஷ் தனது அடுத்த படத்தின் ஹீரோவாக சந்தானத்தை புக் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்க ஒருசில முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாவும் விரைவில் நாயகி பெயர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சந்தானத்தின் இப்போதைய இமேஜூக்கு தகுந்தவாறு இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். என்னிடம் இருந்து அவர் என்ன எதிர்பார்ப்பார் என்பது எனக்கு தெரியும். இதுவரை அவர் என்னுடைய படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். முதல்முறையாக அவர் என் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்' என்று இயக்குனர் ராஜேஷ் கூறியுள்ளார்.

ராஜேஷ்-சந்தானம் கூட்டணி என்றாலே கலகல கூட்டணி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த முறை இந்த கூட்டணி இயக்குனர்-ஹீரோ என்ற முறையில் உருவாகுவதால் இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.