ஜெ. வீடியோ வெளியீடு தேர்தல் விதிமீறல்: ராஜேஷ் லக்கானி

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட 20 வினாடி வீடியோ ஒன்றை சற்றுமுன்னர் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று இந்த வீடியோவை வெளியிட்டது சர்ச்சைக்குரியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதிமீறல் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனியார் செய்திச்சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் பற்றிய வீடியோ தேர்தல் பிரசாரமாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதால் தினகரன் தரப்பினர் மீது தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது ஏன்? வெற்றிவேல் பரபரப்பு தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடந்த ஒருவருடமாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அவரது மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷனும் விசாரணை செய்து வருகிறது

நாளை ஆர்.கே.நகர் தேர்தல்: இன்று ஜெயலலிதா வீடியோவை வெளியிட்ட தினகரன் தரப்பு

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் சற்றுமுன்னர் தினகரன்

'தானா சேர்ந்த கூட்டம் முக்கிய பணி முடிந்தது! ஆடியோ ரிலீஸ் எப்போது?

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்: சன்னிலியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மம்முட்டி-நயன்தாராவுக்கு கிடைத்தது அரவிந்தசாமி-அமலாபாலுக்கு கிடைக்காதது ஏன்?

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்