ஜனவரி 24 ரிலீஸ் பட்டியலில் இணைந்த 3வது படம்!

  • IndiaGlitz, [Sunday,January 19 2020]

கடந்த பொங்கல் பண்டிகையின்போது வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படமும் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படமும் இன்னும் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு படமும் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 24ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’சைக்கோ’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வைபவ், யோகி பாபு நடித்த ’டாணா’ என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது சேரன் நடித்துள்ள ’ராஜாவுக்கு செக்’ என்ற படமும் ஜனவரி 24ஆம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தர்பார் மட்டும் ’பட்டாஸ்’ திரைப்படங்கள் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் போதுமான திரையரங்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.