மாலத்தீவு தான் ஹனிமூனுக்கு பெஸ்ட்: பும்ராவுக்கு ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பும்ராவுக்கும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரியும் சஞ்சனா கணேசனுக்கும் நேற்று கோவாவில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருமணம் முடிந்ததும் பிங்க் நிற உடையில் மணமகன் மற்றும் மணமகள் அழகாக இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பும்ரா பதிவு செய்திருந்தார் என்பதும் கலர்ஃபுல்லான இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ரசித்து வாழ்த்து கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு வாழ்த்துக் கூறி, உங்களது ஹனிமூனுக்கு மாலத்தீவு தான் சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளது. இந்த டுவிட் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சமீபத்தில் மாலத்தீவுக்கு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவு சென்று வந்தார் என்பது தெரிந்ததே. அவரை பின்பற்றி பும்ராவும் தனது மனைவியுடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Congratulations, guys! ??
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2021
We hear Maldives is great in April - May ?? https://t.co/K3cBgz6cBS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments