லூசுப்பசங்க! பாடகி சின்மயி சொல்வது யாரை தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,June 13 2017]
ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக உரிய உரிமங்கள் பெற்று பசுக்களை ஏற்றி வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. பசுப் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் கொண்ட ஒரு அமைப்பினர் இந்த கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரின் மண்டை உடைந்தது. மேலும், பசுக்களை வாகனங்களிலிருந்து இறக்கிவிட்டு லாரிகளை தீ வைத்துக் கொளுத்தவும் முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பிரபல பாடகி சின்மயி, 'இதுமாதிரி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு வேலை எதுவும் இருக்காது என்று நினைக்கின்றேன். அவர்களுக்கு வேலை என்ற ஒன்று இருந்தால் இதுபோன்ற தாக்குதலுக்கு நேரம் இருக்காது. ஒருவேளை இதுதான் அவர்களுடைய முழுநேர வேலையாக இருக்குமோ? லூசுப்பசங்க' என்று கூறியுள்ளார்.
மேலும் 'சிறுவயதினர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் இயக்கத்திற்கு அழைத்து செல்பவர்களுக்கும் இதுபோன்ற வன்முறையை தூண்டி விடுபவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை' என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமாக கூறியுள்ளார்.