ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,April 21 2020]
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக ரேபிட் கிட் கருவிகளை சீனாவிலிருந்தும் தென்கொரியாவில் இருந்தும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களும், மத்திய அரசும் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரேபிட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அது தவறான முடிவை தருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் ரேபிட் கிட்களால் பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தான் அரசு 6% முதல் 71% வரை மாறுபட்ட முடிவுகளை ரேபிட் கிட் கருவிகள் தருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதை அடுத்தே அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கருவியை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரேபிட் கிட் தரத்தை ஆய்வு செய்து வருவதாகவும் இந்த ஆய்வுக்குப் பின்னரே புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்களை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.