ஆண் குழந்தைதான் வேண்டும் என அடம்பிடித்த தம்பதி: 12வது முயற்சியில் வெற்றி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம்பிடித்த தம்பதியினர் விடா முயற்சி செய்ததை அடுத்து 12வது முறையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது
ராஜஸ்தானை சேர்ந்த சுரு என்ற மாவட்டத்தை சேர்ந்த கவட்டி என்ற பெண் தொடர்ச்சியாக 11 பெண் குழந்தைகளைப் பெற்று உள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவட்டியை கேலியும் கிண்டலும் செய்தனர். இருப்பினும் கவட்டியும் அவருடைய கணவரும் தொடர்ந்து ஆண் குழந்தைக்காக முயற்சி செய்தனர்
இதனை அடுத்து 12வது முறையாக அவர் கர்ப்பமானார். இந்த குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று அந்த தம்பதியினர் வேண்டாத தெய்வம் இல்லை. இந்த நிலையில் கவட்டி தம்பதியினரின் விடாமுயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஆம் 12வது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்துள்ளது.
இதனால் இந்த தம்பதி மட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11 பெண் குழந்தைகளில் 6 பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் 3 பெண் குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர் என்றும், இரண்டு பெண் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கும் வயது வரவில்லை என்றும் கூறப்படுகிறது
12 குழந்தைகளை வைத்து கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கும் அனைவரிடமும் கவட்டி தம்பதியினர் ஒரு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments