நீட்டிற்காக செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ் சங்கம்

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

மருத்துவ படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுதும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சுமார் 10ஆயிரம் பேர்களுக்கு மட்டும் கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட், தமிழக மாணவர்கள் அவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் சி.பி.எஸ்.இ க்கு வெறும் கண்டனம் மட்டுமே தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் இருந்து ரயில் ஏறினால்தான் நாளை மறுநாள் ராஜஸ்தான் தேர்வு மையத்தில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த நிலையில் நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும் செய்ய தயார் என்று அறிவித்துள்ளது. அதாவது தமிழக மாணவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம் மற்றும் தேர்வு மையத்திற்கு செல்ல வாகன உதவி ஆகியவை செய்து தரப்படும் என்றும் இந்த உதவி தேவைப்படும் மாணவர்கள் திரு. முருகானந்தம் (9790783187), திருமதி. சௌந்தரவல்லி (8696922117) திரு. பாரதி (7357023549) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து  போராட்டம் நடத்தியது, வழக்குகள் போட்டது தமிழக மாணவர்கள் மட்டுமே. எனவே தமிழக மாணவர்களை பழிவாங்கும் வகையில் சி.பி.எஸ்.இ வேண்டுமென்றே தமிழக மாணவர்களை அலைக்கழிக்கும் வகையில் ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை அமைத்துள்ளது. ஆனால் இதுபோன்ற இடர்கள் தமிழக மக்களின் உணர்வினையும் ஒற்றுமையையும் மேலும் வலுவடைய செய்யும் என்பதே உண்மை. இதுபோன்று இன்னும் எத்தனை விதமான இடர்கள் கொடுத்தாலும் அதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த அந்த இடர்களை ஒரு வாய்ப்பாகவே தமிழர்கள் கருதுவார்கள் என்பதற்கும் இதுவொரு உதாரணமாக கருதப்படுகிறது.

More News

அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது தெரிந்ததே.

கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா

சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சூசன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரிஹான், ரிதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

அஜித் உதவி செய்தாரா? இல்லையா? மாறுபட்ட கருத்துக்களால் குழப்பம்

அஜித் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிகள் பல என்றும், அந்த உதவிகள் ஒருசில ஆண்டுகள் கழித்து உதவி பெற்றவர்களே கூறும்போதுதான் அது வெளியுலகிற்கு தெரிய வரும் என்றும் கூறப்படுவதுண்டு.