பெரியபாண்டியனை சுட்டது சக ஆய்வாளர் முனிசேகரா? ராஜஸ்தான் போலீசார் பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்பட்ட பெரியபாண்டியன் அவர்களின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது கொலை வழக்கை ராஜஸ்தான் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெரியபாண்டியனின் சக ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையனை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை அவருடைய சக ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முனிசேகரின் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால்தான் பெரியபாண்டியன் இறந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக ராஜஸ்தான் போலிசாரிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் பெரியபாண்டியனுடன் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மற்ற 3 காவலர்களும் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநில காவல்துறையினர்களின் இந்த அதிரடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com