மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்தம் 17 எம்.எல்.ஏக்களுக்கு பாதிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்ற பதவிகளில் இருப்பவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர்கள் உள்பட 16 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் அவர்கள் தற்போது சிகிச்சைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் அவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

வனிதா டுவிட்டரை விட்டு வெளியேற நயன்தாரா டுவீட் காரணமா?

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது

நான் ஆணாக இருந்திருந்தால்? குஷ்பு வெளியிட்ட புகைப்படம்

கடந்த சில நாட்களாகவே பிரபலங்களின் புகைப்படங்கள் ஃபேஸ் செயலி மூலம் பாலின மாற்றம் செய்யப்பட்டு வேடிக்கையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும்

வாக்கிங் செல்லும் தலைவர்: வைரலாகும் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்ன செய்தாலும் அது வைரல் ஆகி விடும் என்பதை கடந்த பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட சாத்தான்குளம் சம்பவம் குறித்து

17 வயது சிறுமியை கம்பியால் குத்திவிட்டு கரண்ட் கம்பியில் தொங்கிய வாலிபர்! ஒருதலை காதலால் விபரீதம்

திருவண்ணாமலை அருகே காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை கம்பியால் குத்தி விட்டு அருகில் இருந்த கரண்ட் கம்பி மீது கையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இப்படி ஒரு மாஸ்க் அணிவதும், 12345 பாஸ்வேர்டு வைப்பதும் ஒன்றுதான்: ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார துறையினர் வரை பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்