'பிகில்'விஜய் பேச்சுக்கு டிரம்ப்பை வம்புக்கு இழுத்த அதிமுக எம்.எல்.ஏ!
- IndiaGlitz, [Thursday,September 26 2019]
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய பதினைந்து நிமிட பேச்சு இன்னும் அரசியல்வாதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசியதும், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும் என பேசியதும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் சரியான தீனியாக உள்ளது
இந்த நிலையில் ‘யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும்’ என்று விஜய் பேசியதற்கு அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா விளக்கமளித்தபோது, ‘உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு அளித்தது குறித்துதான் நடிகர் விஜய் அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும், ஏன் அமெரிக்க அதிபர் டிரம்பை குறிப்பிட்டு கூட விஜய் அவ்வாறு பேசியிருக்கலாம்’ என்றும் கூறினார்.
மதுரை எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மதுரை மேயருமான ராஜன் செல்லப்பாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் ஆதரவையும் எதிர்ப்பையும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் விஜய் பேச்சின் வீரியம் இன்னும் அடங்கவில்லை என்பது தெரிகிறது