நானும் சென்னை தாங்க… ரசிக்க வைத்த தெலுங்கு நடிகரின் மேடை பேச்சு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஆர்ஆர்ஆர்“. வரும் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் “உயிரே“ பாடலை ரிலீஸ் செய்வதற்காக படக்குழு சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தனர்.
இதற்காக நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, ராம்சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர், நடிகை ஆலியா பட் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் ராம்சரண் தேஜா, நானும் சென்னைக்காரன் தான் என உற்சாகத்தோடு பேசியிருந்தார்.
மேலும் சென்னைக்கு வருவது என் அத்தைப் பாட்டியை சந்திப்பது போன்றது. நான் போரூர், சோமசுந்தரம் தெருவில்தான் பிறந்தேன். தியாகராய நகரில் பள்ளிப்படிப்பை முடித்தேன். சென்னை எனது இரண்டாவது வீடு. தமிழ் எனது இரண்டாவது மொழி என உருக்கமாகப் பேசியிருந்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ஜுனியர், நான் சென்னைக்கு வரவில்லை என்றாலும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சென்னையில் இயங்கியதால் தமிழ் மொழி எங்கள் மரபணுவில் உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படக்குழு சென்னையைப் பற்றியும் தமிழ் மொழி பற்றியும் பேசிய நெகிழ்ச்சியான கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments