சசிகுமார் ஸ்டைலில் சிரிக்கும் பிரியங்கா: வீடியோவை வெளியிட்ட ராஜலட்சுமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொகுப்பாளினியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பிரியங்கா, நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஸ்டைலில் சிரிக்கும் வீடியோவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ராஜலட்சுமி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா, இந்த நிகழ்ச்சியில் ராஜூவை அடுத்து இரண்டாவது இடத்தைப் பெற்றார் என்பதும் அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வரும் பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமியை அடிக்கடி கேலியும் கிண்டலும் காமெடியாக செய்து வருவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜலட்சுமியின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான பிரியங்கா, சசிகுமார் ஸ்டைலில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘எல்லோருக்கும் வணக்கம், நம்மகிட்ட இருக்கற சந்தோசத்தை அடுத்தவர்களுக்கும் பரப்பவேண்டும் என்று சொல்வார்கள். அதே மாதிரி இன்று நாங்கள் எங்களுடைய சந்தோசத்தை சிறப்பாக வெளிப்படுத்த போகிறோம். இப்போது இந்த பியூட்டி எப்படி சிரிக்க போகிறார்கள் என்று பாருங்கள்’ என்று கூற அதற்கு பிரியங்கா ’நான் சசிகுமார் ஸ்டைலில் சிரிக்கிறேன்’ என்று கூறி சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com