ரெக்கவர் செய்த ராஜகோபாலன் லேப்டாப்....! வெளியான அதிர்ச்சி தகவல்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜகோபாலன் மாணவிகளிடம் எப்படி பாலியல் சீண்டல்களை தொடர்ந்தான் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ராஜகோபாலன். அப்பள்ளியில் படித்துவிட்டு, தற்போது மாடலிங் துறையில் இருக்கும் முன்னாள் மாணவி ஒருவர் தான் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இணைய வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து மாணவிகளின், மொபைல் எண்களை எடுத்து அவர்களின் உடலமைப்பு மற்றும் உடைகள் குறித்து மெசேஜ் அனுப்புவாராம். மாணவிகளிடம் இருந்து வரும் பதிலை வைத்து, அவர்களிடம் அடுத்தடுத்து ஆபாச உரையாடல்கள் மற்றும் ஆபாச படங்களின் வீடியோக்களை அனுப்பி பேசியுள்ளார். மாணவிகள் இதற்கு எதிர்த்தால், சாரி, ராங்போஸ்ட், மாற்றி அனுப்பி விட்டேன் என்று கூறுவானாம் இந்த குரூர எண்ணம் கொண்ட காமுகன் ராஜகோபாலன்.
கைது செய்ததை தொடர்ந்து, ராஜகோபாலனின் லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் கிரைம் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் அதில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததால், அதை ரெக்கவர் செய்யும் சாப்ட்வேர் கொண்டு தகவல்களை திரட்டி வருகிறார்கள். இதில் மாணவிகளிடம் ஆசிரியர் நடத்திய உரையாடல்கள் உள்ள தகவல்கள் கிடைத்துவிட்டதாம். இதன்முலம் மாணவிகளை தனிப்பட்ட முறையில் விசாரித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட மாணவிகளின் பட்டியலையும் காவல் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com