ராஜ கோபாலனா...? காம கோபாலனா....? 250 கேள்விகள்... திடுக்கிடும் தகவல்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் ராஜகோபாலன். தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் தவறாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளான். இதுகுறித்து மாணவிகள் பலரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இப்பிரச்சனை குறித்து மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்க, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இது பரவலான பேசுபொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் புகார்களை குவிக்க, ராஜகோபாலன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் உள்ளான்.
இதையடுத்து காவல் துறையினர் 3 நாட்கள் தொடர்ந்து ராஜகோபாலனை விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்றளவில் விசாரணை முடிந்தபின், ஆசிரியர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் வேறு ஆசிரியர்களுக்கு தொடர்புள்ளதா....? ராஜகோபலனை தவிர வேறு ஆசிரியர்கள் மாணவிகளை தொந்தரவு செய்தார்களா..?பள்ளி நிர்வாகத்திற்க்கு இந்த விஷயங்கள் தெரியுமா..? பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் மாணவிகள் மனநிலை சரியாக இருந்தும், ராஜகோபாலன் அரைநிர்வாணமாக நடந்துகொண்டது ஏன்..? மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பியது ஏன்..? சினிமா கனவுகள் பற்றி கூறி, பெண்களை வலையில் விழ செய்தது எப்படி...? உள்ளிட்ட 250-க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தான் தவறு செய்தது குறித்து ராஜகோபாலன் பேசிய வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் படிக்க வரும் மாணவிகளின் வீடியோக்களை எடுத்தும், வீடியோவில் அவர்களை ஜூம் செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்தும் ரசித்து வந்துள்ளான். மாணவிகளிடம் இவன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது குறித்து, பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் சார்பாக விளக்கம் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில், நேற்று காலை 11 மணியளவில் ராஜகோபாலன் ஆஜராகி விளக்கம் கூறினான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments