விரைவில் 'ராஜதந்திரம்' இரண்டாம் பாகம் வெளியீடு

  • IndiaGlitz, [Wednesday,September 23 2015]

கடந்த மார்ச் மாதம் வெளியாகி வெற்றி படங்களில் ஒன்றாக விளங்கிய திரைப்படம் 'ராஜதந்திரம்'. கவுதம் மேனன் இயக்கிய 'நடுநிசி நாய்கள்' படத்தில் நடித்த நடிகர் வீரபாஹு நடித்த இந்த படம் ரூ.12 கோடி வரை வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது. நகரின் பிசியான இடத்தில் உள்ள நகைக்கடையை வீரபாஹு தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிப்பதுதான் படத்தின் கதை.


இந்நிலையில் 'ராஜதந்திரம்' படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வீரபாஹு தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் வீரபாஹு கூறியுள்ளார்.

இந்த படம் தவிர மேலும் ஒரு முழுநீள ரொமான்ஸ் படத்தில் நடிக்க வீரபாஹு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து அவர் கூறியபோது, "பொதுவாக ஒரு படத்தில் ரொமான்ஸ் காட்சியை பார்த்து ரசிப்பதுபோல், ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது அவ்வளவு சுலபமில்லை. இந்த காட்சிகளில் நடிக்கும்போது இருவருக்குமே மிகுந்த மன அழுத்தம் ஏற்படும்' என்று அவர் கூறியுள்ளார்.

More News

கபாலி-கபிலன் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

நண்பன், எந்திரன் படங்களுடன் கனெக்ஷன் ஆன 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்கா...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஹன்சிகா

பிரபல நடிகை ஹன்சிகா நடிப்பில் மட்டுமின்றி சமூக சேவை மற்றும் பக்தியிலும் ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே...

அஜீத்-விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் - ஸ்ரீதேவி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ளவர் ஸ்ரீதேவி...

விரைவில் 'புலி' படத்தின் 2வது டிரைலர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற டிரைலர் என்பது மட்டுமின்றி பல சாதனைகளை புரிந்தது...