close
Choose your channels

'ராஜா ராணி 2' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!

Sunday, August 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி 2’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை நிகாரிகா. அதன்பிறகு அவர் ’இதயத்தை திருடாதே’ ’வித்யா நம்பர் ஒன்’ போன்ற ஜீ தமிழ் தொடர்களிலும் ’வேலைக்காரன்’ ’ராஜா ராணி 2’ உள்ளிட்ட விஜய் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகாரிகா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் என்பதும் கர்ப்பமாக இருக்கும் போது டான்ஸ் ஆடிய வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை நிகாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு நார்மல் டெலிவரி என்றும் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம் என்றும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் டிவி பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment