'ராஜா ராணி 2' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி 2’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை நிகாரிகா. அதன்பிறகு அவர் ’இதயத்தை திருடாதே’ ’வித்யா நம்பர் ஒன்’ போன்ற ஜீ தமிழ் தொடர்களிலும் ’வேலைக்காரன்’ ’ராஜா ராணி 2’ உள்ளிட்ட விஜய் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிகாரிகா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் என்பதும் கர்ப்பமாக இருக்கும் போது டான்ஸ் ஆடிய வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை நிகாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு நார்மல் டெலிவரி என்றும் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம் என்றும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் டிவி பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

யுவன் பிறந்தநாளில் த்ரிஷா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜய் ரசிகர்களும் குஷி..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் வரும் 31ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

'கோட்' வெளியான சில நாட்களில் சதீஷின் 'சட்டம் என் கையில்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய்யின்  'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி சில நாட்களில் சதிஷ் ஹீரோவாக நடித்த 'சட்டம் என் கையில்'

பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR

விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

கிளாமரான கர்ப்பகால புகைப்படங்கள்.. பிரபல நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

சூர்யா, கார்த்தி படங்களில் நாயகியாக நடித்த நடிகை இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ள நிலையில் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில்

அமெரிக்காவில் பயிற்சி பெறும் பிக்பாஸ் மாயா.. அடுத்த ஒலிம்பிக் சாம்பியனா?

பிக் பாஸ் மாயா அமெரிக்காவில் ஒரு முக்கிய விளையாட்டின் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் தான் சாம்பியன்