திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜ கண்ணப்பன் சந்திக்கவுள்ளதாகவும், அதனையடுத்து அவர் திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகெங்கை தொகுதியில் செல்வாக்குள்ள ராஜகண்ணப்பன் கடந்த 2000ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி 'மக்கள் தமிழ் தேசம்' என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் 2006ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் 2009ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் திமுகவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி திடீர் விலகல்! நடிகையுடன் கருத்துவேறுபாடு காரணமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமாரவேல் என்பவர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தேமுதிகவின் 4 தொகுதி வேட்பாளர்கள் இவர்கள்தான்!

அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்புக்கு பின்னர் இணைந்த தேமுதிக, 4 தொகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்புடனும் வேறு வழியின்றியும் பெற்றது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

'மிஸ்டர் லோக்கல்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

எங்களின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின்: முன்னாள் மத்திய அமைச்சர் டுவீட்

பாராளுமன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகிவிட்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் எப்போது? புதிய அறிவிப்பு

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.