தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்தார். அதனை அடுத்து தற்போது மீண்டும் ஹரிஷ் கல்யாண் உடன் ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன். அதுவும் தமிழகத்தின் நலனுக்காக’ என்று கூறியிருக்கிறார் ரைசாவின் இந்த ட்வீட் செய்துள்ள சமூக வலைத்தள பயனாளிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. ரைசா டேட்டிங் செல்வதற்கும் தமிழகத்தின் நலனுக்கும் என்ன சம்பந்தம்? என்று பலர் இந்த டுவீட்டுக்கு நகைச்சுவையுடன் கூடிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது ‘அலைஸ்’, ‘எப்.ஐ.ஆர்’ மற்றும் காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
I want to start dating @iamharishkalyan just to make TN happy ❤️ love for love ❤️
— Raiza Wilson (@raizawilson) December 8, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com