கேட் வுமன் கெட்டப்பில் கலக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதற்குமுன் சில திரைப்படங்களில் இவர் தலை காட்டியிருந்தாலும் பிக்பாஸ்க்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தில் நடித்து இருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இதையடுத்து தற்போது “காதலிக்க நேரமில்லை”, “டேஷ்டேக் லக்” “எப்.ஐ.ஆர்“ போன்ற பல தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெருக்கமாக ஒரு ஆணுடன் அமர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, யார் இவர் ரைசாவின் காதலரா? என்ற சந்தேகத்தை கிளப்பினார்.

இப்படி எப்போதும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் தற்போது ஹாலிவுட் திரைப்படமான கேட் வுமன் கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் “யாராவது உங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னைப் பார்த்தால் பயந்து விடாதீர்கள்“ என்றும் பதிவிட்டு உள்ளார். ரைசாவின் இந்த புகைப்படம் ஹாலிவுட்டில் நடிகை Halle Berry நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கேட் வுமன் திரைப்படத்திற்கான கெட்டப் போலவே இருக்கிறது.

மேலும் ரைசா வில்சனின் இந்த கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் “எங்க வீட்டு மொட்டை மாடிக்கு வாங்க மேடம்“ என கிண்டலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More News

'சந்திரமுகி 2' என்ன ஆச்சு? வெளிவந்திருக்கும் புதிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சந்திரமுகி' மிகப்பெரிய வெற்றி பெற்றது

விஜய்சேதுபதி-பொன்ராம் படத்தின் நாயகி குறித்த தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

அஜித், விஜய்யை அடுத்து அண்ணாச்சியையும் பாராட்டிய காவல்துறை அதிகாரி!

அஜித் விஜய்யை அடுத்து அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன் அவர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது

ஆட்டோவில் சென்ற தல அஜித்: வைரல் வீடியோ!

தல அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால் டாக்சியில் சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம்

எதிர்க்கட்சி தலைவரை விமர்சனத்தால் தாக்கிய தமிழக முதல்வர்! அதிரும் வீடியோ!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மநீக, அமமுக, நாம் தமிழர் கட்சி என்று ஐந்து கட்ட போட்டி நிலவிவருகிறது.