கேட் வுமன் கெட்டப்பில் கலக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதற்குமுன் சில திரைப்படங்களில் இவர் தலை காட்டியிருந்தாலும் பிக்பாஸ்க்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தில் நடித்து இருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது.
இதையடுத்து தற்போது “காதலிக்க நேரமில்லை”, “டேஷ்டேக் லக்” “எப்.ஐ.ஆர்“ போன்ற பல தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெருக்கமாக ஒரு ஆணுடன் அமர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, யார் இவர் ரைசாவின் காதலரா? என்ற சந்தேகத்தை கிளப்பினார்.
இப்படி எப்போதும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் தற்போது ஹாலிவுட் திரைப்படமான கேட் வுமன் கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் “யாராவது உங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னைப் பார்த்தால் பயந்து விடாதீர்கள்“ என்றும் பதிவிட்டு உள்ளார். ரைசாவின் இந்த புகைப்படம் ஹாலிவுட்டில் நடிகை Halle Berry நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கேட் வுமன் திரைப்படத்திற்கான கெட்டப் போலவே இருக்கிறது.
மேலும் ரைசா வில்சனின் இந்த கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் “எங்க வீட்டு மொட்டை மாடிக்கு வாங்க மேடம்“ என கிண்டலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com