ரைசா தலைவரா? ஜீரணிக்க முடியாத சக்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரும், சூப்பர் வில்லியும் வெளியேறிவிட்ட நிலையில் இந்நிகழ்ச்சி குறித்த ஆர்வம் சற்று குறைந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் பிக்பாஸ் குறித்த பதிவுகள் பெரும்பளவு குறைந்துவிட்டது. பதிவாகும் ஒருசில கருத்துக்களும் வெளியேறிய ஓவியா குறித்தே உள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் குடும்பத்தின் தலைவராக ரைசாவை பிக்பாஸ் தேர்வு செய்துள்ளார். ரைசாவுக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவிக்கும் சக்தி, 'ஆரவ் நீயே இருந்துட்டு போ தலைவராக' என்று கூறுகிறார். இதுகுறித்து வையாபுரியும், சினேகனும் விவாதிக்கின்றனர்.
மேலும் ஓவியா விஷயத்தில் காயத்ரி தவறு செய்துவிட்டதாகவும், ஓவியா குறித்த விஷயங்களை தான் தவறாக காயத்ரியும் கூறிவிட்டதாகவும், சக்தியும் அதற்கு சப்போர்ட் செய்துவிட்டதாகவும் சினேகன் வையாபுரியிடம் தெரிவிக்கின்றார்.
காயத்ரியின் நாட்டாமைத்தனம் மீண்டும் தொடருமா? ரைசாவை தலைவர் பதவியில் நீட்டிக்க விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வாரம் #ரைசா #VivoBiggBoss வீட்டின் தலைவராக.. @Vivo_India #BiggBossTamil pic.twitter.com/ga5mjLyh3D
— Vijay Television (@vijaytelevision) August 7, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com