பிக்பாஸ் வீட்டில் ரைசா புரிந்து கொண்ட உண்மை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ரைசா வெளியேறினார். நேற்றைய ரைசாவின் எவிக்சன் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. கன்ஃபக்ஷன் அறைக்கு அழைக்கப்பட்ட ரைசா அங்கிருந்தே நேராக கமல் இருக்கும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். இதனால் மற்ற பங்கேற்பாளர்களிடம் விடைபெற்று செல்லும் வழக்கமான நிகழ்ச்சி நேற்று நடைபெறவில்லை
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் கமல்ஹாசனிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ரைசா, 'பிக்பாஸ் வீடு தனது பெயரை அடையாள படுத்தியுள்ளதாகவும், இதற்கு முன்னர் மாடல் என்று மட்டும் அழைக்கப்பட்டு வந்த தான், தற்போது ரைசா என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய வீட்டில் இருந்தபோது ஒரு பொருளின் மதிப்பு தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால் பிக்பாஸ் வீட்டில் காசு கொடுத்து எதுவும் வாங்க முடியாது என்பதால் இருக்கும் பொருளை சிக்கனமாக, முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்ற உண்மையை தான் உணர்ந்து கொண்டதாகவும் கூறினார். இந்த உண்மை ரைசாவுக்கு மட்டுமின்றி அனைவரும் உணரவேண்டியது முக்கியம் என்று கமல் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com