ஓவியாவை பிக்கப் செய்ய முயற்சித்தாரா வையாபுரி?

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும். யாராவது ஒருவரை தேர்வு செய்து கார்னர் செய்வது, அவருக்கு டார்ச்சர் கொடுத்து ஒன்று அவராகவே வெளியேற செய்ய வைப்பது அல்லது தொடர்ந்து நாமினேஷன் செய்து வெளியேற்றவது, ன்பதுதான் நடந்து வருகிறது. பரணி, ஓவியா உள்பட ஒருசிலர் இப்படித்தான் விரட்டப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த பட்டியலில் பங்கேற்பாளர்கள் தற்போது தேர்வு செய்தது வையாபுரியை. வையாபுரி நகைச்சுவைக்காக ஓவியா இருக்கும்போது அவரை நோக்கி பாட்டு பாடியதை உள்நோக்கத்தோடு அவரை பிக்கப் செய்ய பாடியதாக ரைசா ஆரவ்விடம் கூறுகிறார். ஆரவ்வும் அதை 'உம்' கொட்டி கேட்டு வருகிறார். பிந்துவிடமும் வையாபுரி தவறாக நடந்ததாகவும், சுஜாவை பார்த்து ஒரு பாடலை கிண்டலாக பாடியதாகவும் வையாபுரி மீது ரைசா குறை கூறுகிறார்.
ரைசா சொல்வதை காஜலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தலையாட்டுவதால் வையாபுரி தான் அடுத்த கார்னர் என் தெரிகிறது. இன்றைய நிகழ்ச்சியில் வையாபுரி நாமினேஷன் செய்யப்பட்டால் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது