close
Choose your channels

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பில் நடந்த முக்கிய ஆலோசனை என்ன?

Saturday, March 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள நிலையில் நேற்று ரஜினியின் அழைப்பை ஏற்று கார்த்திக் சுப்புராஜ், ரஜினியின் போயஸ் தோட்ட இல்லம் சென்று அவரை சந்தித்து பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் படத்தின் முழு ஸ்கிர்ப்டை ரஜினிகாந்த் படித்ததாகவும், அதன் பின்னர் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நட்சத்திர தேர்வு மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக நாயகி தேர்வு குறித்து இருவரும் ஒருமித்த கருத்தை கூறியதாக தெரிகிறது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினி நடித்த 'காலா', மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாகவுள்ளதால் இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் மூன்று படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment