ஐபிஎல் போட்டிகளில் ரெய்னாவுக்கு முதன்முதலாக  வந்த சோதனை

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன், அதிக போட்டிகளில் விளையாடிவர், எந்த போட்டியையும் மிஸ் செய்யாதவர் ஆகிய பெருமைகளை கொண்டவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான இவருக்கு தற்போது முதன்முதலாக சோதனை ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆம், ரெய்னாவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.

ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் கேதார் ஜாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது ரெய்னாவும் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் சிஎஸ்கே ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

வரும் ஞாயிறு அன்று மொகாலியில் பஞ்சாப் அணியுடன் விளையாடும் போட்டியிலும் வரும் 20ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடன் விளையாடும் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள மாட்டார். சென்னையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது சுரேஷ் ரெய்னா காயமடைந்தார் என்பதும் தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதால் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெய்னா, கேதார் ஜாதவ் ஆகியோர்களின் இழப்பால் மிடில் ஆர்டரில் பலவீனம் ஏற்படும் என்றாலும் பிராவோ, தோனி, தீபக் சாஹர், டூபிளஸ்சிஸ் ஆகியோர் மிடில் ஆர்டரில் ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமருக்கு கமல் வீடியோ மூலம் விடுத்த கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கமல்ஹாசன் வீடியோவில் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பிரபல இயக்குனர்கள் கைது

நரேந்திரமோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிரபல இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

டாஸ்மாக்கையும் மூடுவீர்களா? ஐபிஎல் ரத்து குறித்து பிரபல நடிகர்

ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள். இதேபோல் டாஸ்மாக் கடைகளையும் மூடவும், அரசியல்வாதிகள் நடத்தி வரும் அனைத்து டிவி சேனல்களை மூடவும் போராடுவீர்களா?

காவிரி பிரச்சனை குறித்து சாம் பில்லிங்ஸ் பதிவு செய்த டுவீட்

சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து நாங்கள் வெளியேறும் நிலை எங்களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. சென்னை போட்டியை பார்க்க வந்த ரசிகர் காயம் அடைந்தது என் மனதை வேதனை அடைய செயுதுள்ளது.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை திடீர் நிறுத்தம்

சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக அந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.