போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதா? வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் அருகில் தண்ணீர் புகுந்துள்ளதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருக்கிறார் என்றும் அவரது குடும்பத்தினரும் பண்ணை வீட்டில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் தெரிகிறது. மேலும் ரஜினி வீட்டு அருகில் தண்ணீர் இருந்தாலும், அவரது வீட்டுக்குள் தண்ணீர் இல்லை என்றும் மேலும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் ரஜினி வீட்டுக்கு செல்லும் தெருவில் தண்ணீர் அதிகம் உள்ளது என்றும் விரைவில் அந்த தண்ணீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
Poes Garden near @rajinikanth house @Savukkumedia @SavukkuOfficial #ChennaiFloods2023 #ChennaiRains2023 #chennaicyclone #சென்னையை_மீட்ட_திமுக pic.twitter.com/tHiYTrFsW2
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) December 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments