வீட்டிற்குள் 2 அடியில் தண்ணீர்: இசையமைப்பாளரின் புகாருக்கு தமிழக அமைச்சரின் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டது என்றும் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் விட்டுவிட்டு கனமழை பெய்ததால் சென்னையின் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் தனது வீடு உள்ள பகுதியில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி கிடைப்பதாகவும் மூன்று மணி நேரமாக தனது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த பல நெட்டிசன்கள் தங்கள் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கிடப்பதாகவும் விரைவில் சென்னை மாநகராட்சி தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் மா பொ அன்பரசன் அவர்கள், ‘காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருடன் உங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு நானே இரண்டு முறை நேரில் செய்து ஆய்வு செய்தேன். உங்கள் வீடு இருக்கும் பதில் உள்ள கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. உடனடியாக கால்வாய் உயரத்தை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். விரைவில் நிலைமை சரிசெய்யப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்காது’ என்று பதிலளித்துள்ளார்.
2 feet of water in front of our home. Water entered our home 3 hours ago. Are you all safe ? #ChennaiRains pic.twitter.com/QstdGPilNK
— Santhosh Narayanan (@Music_Santhosh) November 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments