தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!


தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதைத்தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிககன மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

2.11.2021- டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.11.2021- மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.11.2021- வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

05.11.2021- கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

More News

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து- உயர்நீதிமன்ற மரைக்கிளை!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

நாளை 'ஜெய்பீம்' ரிலீஸ்: இன்று ரூ.1 கோடி நிதியுதவி செய்த சூர்யா!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று தமிழக முதல்வரிடம் சூர்யா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

நீ பிரச்சனையை கிளப்புறதுக்குன்னே இருக்கியா? பிரியங்காவிடம் ஆவேசமாக மோதும் இமான்!

 நீ பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டாயா என பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… விளாசும் முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு இருக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கத்தில் உருவாகி வந்த 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.