கனமழை எதிரொலி: 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Thursday,November 30 2017]

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்கள் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவித்துள்ளனர்.

மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் - ஜி.வி.பிரகாஷ் படம் குறித்த முக்கிய தகவல்

'மின்சார கனவு' படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் ஒரு படம் இயக்குகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அசோக்குமார் தற்கொலை வழக்கில் இருவர் அதிரடி கைது: 

சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு தற்கொலைக்கு அன்புச்செழியனே காரணம் என்று அசோக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தலைமறைவாகியுள்ள அன்புச்செழியனை பிடிக்க

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது எப்போது? அண்ணன் சத்தியநாராயணா ராவ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்தபோது 'போர் வரும்போது அரசியல் அறிவிப்பு வரும்' என்று கூறினார்.

நர்ஸ்கள் போராட்டத்திற்கு பிக்பாஸ் ஜூலி ஆதரவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் ஒருவர் ஜூலி என்பதும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்பதும் தெரிந்ததே.

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரின் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின்