சென்னையில் இன்று மாலை வரை கனமழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நேற்று முதல் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய அடுத்த நாளே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று மாலை வரை சென்னையில் கனமழை தொடரும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னையின் ஒரு சில இடங்களில் 150 முதல் 200 மில்லி மீட்டர் வரை கடந்த சில மணி நேரத்தில் மழை பெய்து உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 178 மில்லி மீட்டரும் செங்குன்றம் பகுதியில் 128 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சென்னை கனமழை காரணமாக மெரினா பீச் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் அதிக மழை பெய்து உள்ளதாகவும் இதனால் மெரினா பீச் கடற்கரையிலேயே தண்ணீர் தேங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  044 2538 4530, 044 2538 4540 ஆகிய எண்களில் 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என பருவமழை குறித்த புகாரை தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

More News

சென்னையில் தோன்றிய சிகப்பு தக்காளி: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கனமழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

கடைசியில ரம்யா பாண்டியனையும் அழவைச்சிட்டாங்களே பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்று பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர்

ரஜினி அரசியலுக்கு வரவில்லையா? வைரலாகும் கடிதத்தால் பரபரப்பு

ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் உறுதியாக அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆன்மிக அரசியலை தொடங்க இருப்பதாகவும்

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா???

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது? முதலமைச்சர் விளக்கம் 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி