சென்னையில் இன்று மாலை வரை கனமழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நேற்று முதல் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய அடுத்த நாளே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை காரணமாக மழை நீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று மாலை வரை சென்னையில் கனமழை தொடரும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னையின் ஒரு சில இடங்களில் 150 முதல் 200 மில்லி மீட்டர் வரை கடந்த சில மணி நேரத்தில் மழை பெய்து உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 178 மில்லி மீட்டரும் செங்குன்றம் பகுதியில் 128 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கனமழை காரணமாக மெரினா பீச் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் அதிக மழை பெய்து உள்ளதாகவும் இதனால் மெரினா பீச் கடற்கரையிலேயே தண்ணீர் தேங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 044 2538 4530, 044 2538 4540 ஆகிய எண்களில் 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என பருவமழை குறித்த புகாரை தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
Semma Semma !!!! The dryline-wetline are creating Thakkalis too. What an spell going on and the intensity is vera level in Anna Nagar pic.twitter.com/ZU1DCUzdBw
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) October 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments