வெயிலை பார்த்து ஏமாற வேண்டாம், இன்றும் மழை உண்டு. தமிழ்நாடு வெதர்மேன்

  • IndiaGlitz, [Thursday,November 02 2017]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் 'வெயிலை பார்த்து யாரும் பருவமழை முடிந்துவிட்டதாக கருத வேண்டாம், இன்று மாலையும் கடந்த செவ்வாய் இரவு போலவே மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்னும் அதே பகுதியில் நிலை கொண்டிருப்பதால் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்றும், இன்று காலையில் வெயில் அடித்தாலும் மாலை முதல் மழை இன்னும் வேகமெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செம்பரப்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் உடையும் ஆபத்து இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பரவி வரும் செய்தி, வெறும் வதந்தி என்றும், செம்பரப்பாக்கம் ஏரி உண்மையில் 20% மட்டுமே நிரம்பியுள்ளதால் இதுகுறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறிய தமிழ்நாடு வெதர்மேன், இத்தகைய வதந்திகளை பரப்புபவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

More News

நித்திரை கலைத்து நீரில் மூழ்குவதை தவிர்ப்போம்: கமல் மீண்டும் எச்சரிக்கை

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே எண்ணூரில் உள்ள ஆபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் எச்சரித்ததோடு, அந்த பகுதிக்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார்.

தம்பி ராமையா இயக்கும் படத்தின் ஹீரோ-டைட்டில் அறிவிப்பு

நடிகர் தம்பிராமையாவை அனைவருக்கும் ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் தெரியும், ஆனால் ஒரு இயக்குனர் என்பது வெகுசிலருக்கே தெரிந்த உண்மை.

இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்? விஷால் வேதனை

சென்னையில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ளம், உயிர்ச்சேதம் ஏற்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த 2015ஆம் வருடம் கனமழை மற்றும் பெருவெள்ளத்தாலும்,

ஆர்.கே.சுரேஷ் படத்தில் அஜித் பாடல்

கோலிவுட் திரையுலக நடிகர்களின் பல படங்களில் தல அஜித்தின் பாடல்கள், போஸ்டர்கள், பேனர்கள் இணைக்கப்பட்டு வந்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் மெர்சல்'  வசூல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வசூல் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை