வழக்கத்தைவிட 3 மணிநேரம் முன்னாடியே செல்லும் ரயில்கள்? பயணிகளை அசத்தும் பிற வசதிகள்…
Send us your feedback to audioarticles@vaarta.com
வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை விட 3 மணிநேரத்திற்கு முன்பாக பயணிகளைக் கொண்டு செல்லும் புதியவகை ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் இன்றுமுதல் குளோன் ரயில்கள் இந்திய மாநிலங்களில் இயக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. அதன் முதற்கட்டமாக 40 ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
மற்ற ரயில்களை விட முன்னதாகவே பயணத்தை ஆரம்பிக்கும் இந்தவகை ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயண இடத்தை சென்றடையும் என்றும் மத்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. மேலும் இந்தவகை ரயில்களில் பெரும்பாலும் ஏசி பெட்டிகளே அமைக்கப்பட்டு இருக்கும் என்பதும் மற்றொரு சிறம்பசம். பொதுவாக நாம் ரயில்வே டிக்கெட்டை பதிவு செய்து விட்டு மாதக்கணக்காக வெயிட்டிங் லிட்லேயே காத்திருக்க வேண்டிவரும். அப்படி இல்லாமல் உத்திரவாதத்துடன் ரயில்வே டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வசதியும் குளோன் ரயில்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பல சமயங்களில் அவசரத் தேவைக்காக ரயில் டிக்கெட்டை பதிவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியான நேரத்தில் இந்த குளோன் ரயில்கள் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நம்பலாம். 18 பெட்டிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்த குளோன் ரயில்கள் அதிகபடியான நிறுத்தங்களை கொண்டிருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
இன்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் குளோன் ரயில்கள் பீகார், மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேகமான பயணம், உத்தரவாதத்துடன் டிக்கெட், அவசரத்துக்கும் டிக்கெட் கிடைக்கும் வசதி போன்றவற்றைக் கொண்ட குளோன் ரயில்கள் இந்திய மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments