ஊரடங்கில் கிளம்பிய முதல் பயணிகள் ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு விமோசனம்

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல வழிவகை செய்யப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து முதல்கட்டமாக இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள லிங்கம்பள்ளி என்ற பகுதியில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் கிளம்பியது. இதில் வெளிமாநில தொழிலாளர்கள் 1200 பேர்கள் உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர். அவர்களை காவல்துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் கிளம்பும் முதல் பயணிகள் ரயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இன்னும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என்றும் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் சொந்த ஊருக்கு சென்ற பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.