ரயில்வே ஊழியரை கட்டி வைத்து உதைத்த தமிழ் நடிகர்? காவல் நிலையத்தில் புகார்!

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

ரயில்வே ஊழியர் ஒருவரை தமிழ் நடிகர் ஒருவர் கட்டி வைத்து நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற 56 வயது ரயில்வே ஊழியர், மறைந்த நடிகர் அலெக்ஸின் மருமகனும் நடிகருமான ஜெரால்ட் என்பவரிடம் 35,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனுக்கு இது வரை வட்டி கட்டி வந்த அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில மாதங்களாக வட்டி பணம் கட்டவில்லை என்று தெரிகிறது

இதனை அடுத்து சமீபத்தில் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். பின்னர் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு இடத்தில் வட்டி மேல் வட்டி கேட்டு அடித்து உதைத்ததாக தெரிகிறது

இந்த நிலையில் அவர்களிடம் கால அவகாசம் கேட்டு தப்பிவந்த ஆறுமுகம், போலீசாரிடம் புகார் அளித்தார். நடிகர் ஜெரால்டு அடியாட்களை வைத்து தன்னை கடத்தி நாள் முழுவதும் மிரட்டி அடித்து உதைத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

விஜய் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்: இயக்குனர் வெற்றிமாறன்

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன்.

தமிழகத்தில் இவ்வளவு தற்கொலையா? 4 நிமிடத்தில் ஒரு உயிர் பிரிவதாக பகீர் தகவல்!!!

இந்திய அளவில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

அகதியாக தஞ்சம் அடைந்தவருக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்!!! பரபரப்பு தகவல்!!!

இத்தாலிக்கு அகதியாக வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பல்லாயிரக் கணக்கான அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனா காலத்திலும் இந்திய அளவில் வேலை வாய்ப்பின்மையைக் குறைத்து அதிரடி காட்டும் தமிழக அரசு!!!

கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து

சுசிந்திரன் அடுத்த படத்தில் இரண்டு தமிழ் ஹீரோக்கள்!

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் 'நான் மகான் அல்ல' 'பாண்டிய நாடு' 'ஜீவா' 'பாயும் புலி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்