ராய்லட்சுமியின் 'சிண்ட்ரெல்லா' சென்சார் தகவல்: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது

கடந்த 2005ஆம் ஆண்டு ’கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராய்லட்சுமி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் முடிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், கல்லூரி வினோத், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மமதி சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். அஸ்வமித்ரா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.ஐ நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.