இது புது டிரெண்டா? நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட் புகைப்படம் வெளியிட்ட நடிகை லட்சுமி ராய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிகாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்த நடிகையான லட்சுமி ராய் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே கடும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில கடந்த 2005 இல் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய். இவர் அதற்குப் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்தியா முழுக்கவே ஹீரோயின், துணை நடிகை என்று பிரபலமாக இருந்து வந்தார். மேலும் ‘அகிரா‘, ஜுலி2 போன்ற இந்தி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் ‘தாம் தூம்’, ‘வாமனன்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’, ‘தாண்டவம்’, ‘இரும்புக்குதிரை’, ‘அரண்மனை’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடிவந்த இவருக்கு ரசிக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்துவந்தது.
சமீபத்தில் ஒருசில தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்துவந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சோஷியல் மீடியாவில் புதுப்புது போட்டோஷுட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு கிடைத்து வருகிறது.
மேலும் நடிகை லட்சுமி ராய் பதிவிடும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பை அளித்துவரும் நிலையில் தற்போது பிகினி உடையையே படு வித்தியாசமாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதாவது கருப்புநிற பிகினி உடையணிந்திருக்கும் நடிகை லட்சுமி ராய் அதற்குமேல் ஒரு பேண்ட் அணிந்து தனது தோற்றத்தை முற்றிலும் வித்தியாசமாக மாற்றியிருக்கிறார்.
இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் ரசிகர்கள் அதற்கு தாறுமாறான கமெணட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர்கள் பைத்தியம் பிடித்து விட்டதா? என்று கேள்வி கேட்டிருக்கும் நிலையில் பெரும்பாலான ரசிகர்கள் நடிகை லட்சுமி ராயின் தோற்றத்திற்கு வரவேற்பை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments