எவர் க்ரீன் யூத்… ரசிகர்களிடம் கெத்தா சொல்லிக் கொள்ளும் நடிகை ராய்லட்சுமி புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தாம் தூம்” திரைப்படத்தில் வழக்கறிஞராக அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். பின்னாட்களில் அஸ்ட்ராலஜி காரணமாக தன்னுடைய பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில படங்களில் மட்டும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ராய்லட்சுமி பின்னர் கிளாமர் காட்ட துவங்கிவிட்டார். இதனால் “இரும்பு குதிரை“, இரும்புக்கோட்டை“, “மங்காத்தா“ போன்ற திரைப்படங்களில் எல்லைமீறிய கவர்ச்சியில் நடித்து இருந்தார். இதற்கு மாறாக பேய் த்ரில்லர் வகை படங்களான “அரண்மனை“, “காஞ்சனா“ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கலவரமாக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு, இந்தி சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவந்த இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பேய் மற்றும் த்ரில்லர் வகையறா படமான “சிண்ட்ரெல்லா“ திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகை ராய் லட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி பிகினி உடையில் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவது புதிதல்ல என்றாலும் தற்போது முதல்முறையாக தன்னுடைய இளமை தோற்றத்தைக் குறித்து “Forever Young“ என்ற கேப்ஷனை பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனாலும் நடிகை ராய் லட்சுமியின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த ரசிகர்கள் உங்களுக்கு 32 வயது ஆகிறது என்றால் நம்பவா முடியும். நீங்கள் எப்போதும் ஹாட் மற்றும் இளமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com