அரபு ஸ்டைலில் வெரைட்டி காட்டும் நடிகை ராய் லட்சுமி… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் “கற்க கசடற“ படத்தில் லட்சுமி ராய் என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. பின்னர் தன்னுடைய பெயரை நியூமரலாஜிபடி மாற்றிக் கொண்டதும் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றுதான். இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் தொடர்ந்து ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது அந்த பாதிப்பில் இருந்து உடல்நலம் பெற்று பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அரபு ஸ்டைலில் விதவிதமாக உடையணிந்த வீடியோ ஒன்றை நடிகை ராய் லட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் இதுகுறித்த டிரெய்லர் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தப் பதிவின் மூலம் ராய் லட்சுமியின் அடுத்த படத்தை எதிர்ப்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
நீண்டகாலமாக சினிமா துறையில் இருந்து வரும் ராய் லட்சுமி நடிகர் ஜெயம் ரவி நடித்த “தாம் தூம்” படத்தின் நடிப்புக்காக பாரட்டப்பட்டார். பின்பு காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற படங்களிலும் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. அந்த வகையில் அரபு ஸ்டைலில் மேலும் ஒரு புது நடிப்பை ரசிகர்களுக்கு நடிகை ராய் லட்சுமி கொடுக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments