இதையா இத்தனை காலம் நம்பியிருந்தோம்? 'குக் வித் கோமாளி' குட்டை உடைத்த ராகுல் தாத்தா!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது என்பது தெரிந்ததே. மூன்று சீசன்களின் அனைத்து எபிசோடுகளையும் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா ஆகியோர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியுடன் இணைவது, மற்றும் என்ன சமையல் சமைக்க போகிறார்கள் என்பதை சஸ்பென்ஸ் உடன் நடுவர்கள் தெரிவிப்பது ஆகியவை அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா இந்த நிகழ்ச்சி குறித்து கூறிய போது ’நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முதல் நாளே நாங்கள் என்ன சமைக்க வேண்டும் என்பதை எங்களுக்கு மெசேஜ் அனுப்பி விடுவார்கள்’ என்று கூறியிருந்தார். இதையா இத்தனை காலம் நம்பி கொண்டிருந்தோம் என இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா இதனை மறுத்தார். என்ன சமைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல மாட்டார்கள் என்றும், செட்டிற்கு நாங்கள் சென்ற பின்புதான் அங்கு என்ன சமைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் என்றும் அதில் நாங்கள் எப்படி வித்தியாசமாக சமைக்க முடியும் என்று சிந்தித்து சமைப்போம் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே எந்த குக்கிற்கு எந்த கோமாளி என்பதையே முன்கூட்டியே முடிவு செய்துவிடுவார்கள் என்று கடந்த சீசனின் போது ஒரு வதந்தி கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com