திருமணம் எப்போது? ராகுல்காந்தியின் சுவாரஸ்யமான பதில்

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் ராஜீவ்காந்தி-சோனியாகாந்தி தம்பதியின் புதல்வருமான ராகுல்காந்திக்கு தற்போது 46 வயது ஆகிறது. இவருடைய சகோதரி பிரியங்கா காந்திக்கு திருமணம் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ராகுல் காந்தியின் திருமணம் எப்போது? என்று காங்கிரஸ் தொண்டர்கள் உள்பட அனைவரிடம் இருந்து கடந்த சில வருடங்களாக கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல்காந்தியிடம் ஒரு தொண்டர் 'உங்கள் திருமணம் எப்போது' என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய ராகுல்காந்தி, 'எனது திருமணத்திற்காக இனி அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை' என பதில் அளித்தார்.

ராகுல்காந்தி வெளிநாட்டு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்ய உள்ளதாகவும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிராமண பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாகவும் பல வதந்திகள் அவ்வப்போது கசிந்து வருகிறது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் விரைவில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

More News

என்னிடமும் சிலர் தவறாக நடந்து கொண்டனர். பிரபல தமிழ் நடிகை

நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகம் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் தன்னிடமும் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டதாக 'காதல்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்...

மிக அதிக தொகைக்கு இன்சூர் செய்யப்பட்ட ரஜினி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகாவின் மிக அதிகமான பொருட்செலவில் உருவாகி வரும் படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.0'...

ரஜினி-லதா தம்பதிக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் லதா அவர்களும் 36 வருடங்களுக்கு முன் அதாவது கடந்த 1981ஆம் ஆண்டு இல்வாழ்க்கையில் இணைந்த நாள் இன்று. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது ஒரு ரசிகையாக கல்லூரி இதழ் ஒன்றுக்காக ரஜினியை பேட்டியெடுக்க சென்ற லதா, அவரிடம் மனதை பறிகொடுத்து பின்னர் வாழ்க்கையிலும் இணைந்த நாள் இன்று...

ஜெ.குறித்த சர்ச்சை கருத்து கூறியது ஏன்? கைதான ராமசீதா பரபரப்பு வாக்குமூலம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராமசீதா என்பவர் தன்னை அப்பல்லோ டாக்டர் என்று அறிமுகம் செய்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள் என்றும், தான் அந்த மருத்துவமனையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் பரபரப்பு தகவலை கூறினார்...

ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து கமலின் அடுத்த பார்வை

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசனின் சமூக வலைத்தள பக்கம் சூடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இதனால் அவருடைய பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது...