கொஞ்சம் இதையும் கவனிங்க... பிரதமருக்கு ராகுல் காந்தி கூறியிருக்கும் அறிவுரை!!!

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

 


முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு பா.ஜ.க வே காரணம் என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் போன்றோர் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது இது குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மத்தியப் பிரதேசத்தில் கலைக்கும் நேரத்தில் பெட்ரோல் விலையைக் குறைத்து மக்களுக்கு நன்மை செய்யலாம்” என்கிற ரீதியில் பிரதமருக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ராகுல் காந்தி. தற்போது இக்கருத்து இணைய ஊடகங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

தனது டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி “மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட காங்கிரஸ் அரசை கலைப்பதில் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும் இதே வேளையில், உலகளாவிய எண்ணெய் விலையில் 35% சரிவு ஏற்பட்டு இருக்கிது. அதை நீங்கள் கவனிக்க மறந்துவிட்டீர்கள். இந்த சூழலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.60 குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்கும் நன்மையை தயவு செய்து வழங்க முடியுமா? இந்தியா, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் நிலையில் இந்நடவடிக்கை பொருளாதாரத்தை உயர்த்த உதவும்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியில் ராகுலின் இந்த டிவிட் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. ரஜினி பாஜக-வில் சேர வேண்டும்..! பொன்.ராதாகிருஷ்ணன்.

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் இந்த தருணத்தில் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்வது சரியாக இருக்காது

பயங்கரவாதத்தின் மத்தியில் மலர்ந்த ஜனநாயகக் குரல் பெனாசிர் பூட்டோ!!!

“ஒருநாள் கண்டிப்பாக சுட்டுக் கொல்லப் படுவோம்“ எனத் தெரிந்தே அரசியலில் பங்கேற்று, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இ

கொரோனா update.. இந்தியாவில் இன்று வரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா..?!

முதலில் 5 பேருக்கு மட்டுமே கோரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. அடுத்த நாளே அந்த எண்ணிக்கை 29 ஆனது. அதன்பிறகு 40.. இன்று 73ல் வந்து நிற்கிறது.

ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதன் முழு தொகுப்பு

என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும்‌, எனது ரசிகர்களுக்கும்‌, ஊடக நண்பர்களுக்கும்‌ எனது பணிவான வணக்கம்‌. கடந்த வாரம்‌ (மார்ச்‌ -5) சென்னையில்‌

ஐ.பி.எல், முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்க 'தடை' விதித்துள்ளதா மஹாராஷ்டிரா அரசு..?!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் பிரீமியர் லீக்கின் தொடக்க ஆட்டம் நுழைவுசீட்டு(டிக்கெட்) விற்பனையை மஹாராஷ்டிரா அரசானது தடை செய்துள்ளது.