காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? ராகுல் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு இன்றும் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் குறித்து பேசியதாக கூறினார். மேலும் ராகுல்காந்தியிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் பேசவில்லை என்றும் ஆனால் தமிழக அரசியல் குறித்து விரிவாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கமல் சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், 'கமல்ஹாசன் உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் குறித்து ஆலோசனை செய்தோம். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன்' என்று கூறியுள்ளார்.
இருவருமே மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறினாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கமல்ஹாசனை ஒருசிலர் பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்று கூறியதற்கு இந்த சந்திப்பு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments