ராகுல்தான் பிரதமர்: ஸ்டாலின், ஸ்டாலின் தான் முதல்வர்: ராகுல்காந்தி

நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். இதனை நான் அன்றே தைரியமாக முதல் நபராக கூறினேன். இன்றும் உறுதியாக சொல்கிறேன். ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர்' என்று முக ஸ்டாலின் பேசினார்.

இதனையடுத்து பேச வந்த ராகுல்காந்தி, 'மு.க ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர் என்று கூறினார். நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன், அவரை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது என்று கூறிய ராகுல்காந்தி, கருணாநிதி மறைந்தாலும் அவரது கொள்கை தமிழகத்தை எப்போதும் வழிநடத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்.

மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல என்றும் மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி என்றும் ராகுல்காந்தி பேசினார். மேலும் தமிழக மக்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் என்றும், உண்மையை காக்க தமிழக மக்கள் உயிரையும் கொடுப்பார்கள் என்றும் கூறிய ராகுல், பிரதமர் மோடிக்கு பொய் பேசுவது மட்டுமே வேலை என்றும் ஆட்சிக்கு வரும் முன் ரூ.15 லட்சம் அளிப்பதாக கூறிய அவர் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும் கூறினார்.