ராகுல் காந்தி எனது தம்பி': முதலமைச்சர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ்!
- IndiaGlitz, [Monday,February 28 2022]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திராவிட முறைப்படி எனது தம்பி என அழைக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார் .
முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய ’உங்களில் ஒருவன்’ என்ற சுயசரிதை நூல் இன்று சென்னையில் வெளியானது. இந்த நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த விழாவில் ராகுல் காந்தி, உமர் அப்துல்லா, பினரயி விஜயன், தேஜஸ்வி, கவிஞர் வைரமுத்து, சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சத்யராஜ் பேசிய போது, ‘எனது ஆங்கிலம் மோசம் தான், ஆனாலும் ராகுல் காந்திக்காக ஆங்கிலத்தில் பேசுகிறேன். ராகுல் காந்தியை நான் வரவேற்கிறேன், ஏனெனில் அவர் தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ஜித்தார். திராவிட முறைப்படி ராகுல்காந்தியை தம்பி என அழைக்கிறேன்.
மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மிசா காலத்து பகுதிகளை திரைப்படமாகவே தயாரிக்கலாம். நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன். எம்ஜிஆர் ரசிகனாகவே முதலமைச்சர் முக ஸ்டாலினை வாழ்த்துகிறேன். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று கூறி தனது உரையை சத்யராஜ் முடித்தார்.